business

img

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு!

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,953.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாதம் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள், எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,953.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.